ஸ்ரீ ஐயப்பன் உற்சவமூர்த்தி திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா.!
திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள் மற்றும் ஸ்ரீ புதூர் மாரியம்மன் ஸ்ரீ வண்டு மாரியம்மன் ஸ்ரீ ஐயப்பன் உற்சவமூர்த்தி திருக்கோவில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக திருவிழா
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் கீழ் குப்பம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ காக்கங்கரை விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணியர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்றாய பெருமாள் மற்றும் ஸ்ரீ புதூர் மாரியம்மன் ஸ்ரீ மண்ணு மாரியம்மன் ஸ்ரீ ஐயப்பன் உற்சவமூர்த்தி திருக்கோவில் அஷ்ட பந்தன ஜீரணோதாரன மகா கும்பாபிஷேகம் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மங்கல இசை, இரண்டாம் காலயாக பூஜைகள், தம்பதிகள் சங்கல்பம், பூர்ணஹீகி, தீபாராதனை, கலச புறப்பாடு, தீர்த்த பிரசாதம் மஹாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்று கோபுரத்தின் மீது உள்ள கோபுரகலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டு பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவில் திருப்பணி குழு நிர்வாகிகள், விழா கமிட்டினர், ஊர் பொதுமக்கள் மற்றும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
கலந்து கொண்ட பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ந.வெங்கடேசன்