திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையினரின் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறையினரின் பணி புறக்கணிப்பு போராட்டம்

திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை உள்ள பணியிடங்கள் தொடர்ந்து பறிபோகும் அவலம் உள்ளது. 

பணியிடங்களை பாதுகாத்திடவும்,  9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் திருமால் தலைமையில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைப்பெற்றது. 

இந்தப் போராட்டத்தில் தமிழக அரசின் திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு செல்ல இரவு, பகல் பாராது அயராது உழைத்து பணி செய்பவர்கள் வருவாய்த்துறை அலுவலர்கள்,

நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தொடர்ந்து தமிழக அரசு மறுத்து வருகிறது. 

இளநிலை முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிட வேண்டும்.
மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
முதுநிலை வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலையை களைந்து ஒருங்கிணைந்த பணி முதுநிலை தொடர்பாக தெளிவுரைகளை வருவாய் நிர்வாக ஆணையர் உடன் வெளியிட வேண்டும். 

என்று ஒன்பது அம்ச கோரிக்கைகளை
 நிறைவேற்றகோரி  ஆட்சியர் அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ந.வெங்கடேசன்