ஆளுநரை கண்டித்து திருப்பத்தூரில் தி மு க - வினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர்

தமிழக ஆளுநரை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட திமுகவினர் ஆர்ப்பாட்டம்
கொள்கை பற்று கொண்ட திமுகவை அண்ணாமலை அல்ல எந்த கொம்பனாலும் வீழ்த்த முடியாது ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவை தலைவர் ஆவேசம்
சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்ததை கண்டித்தும் ஆளுநருக்கு ஆதரவாக அதிமுக பாஜக கள்ள உறவு வைத்து செயல்படுவதை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட திமுகவின் சார்பாக மாவட்ட அவைத் தலைவர் ஆனந்தன் தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட திமுகவினர் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அப்போது பேசிய அவை தலைவர் ஆனந்தன் திமுக கொள்கை பற்று கொண்ட கட்சி எனவும்திமுகவை அண்ணாமலை அல்ல எந்த கொம்பனும் அசைக்க முடியாது எனவும் பதவியில் இருப்பவர்கள் பதவியில் இல்லாதவர்களையும் அரவணைத்து செல்வது திமுகவின் பலம் என்றும் கூறினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஆளுநர் பதவி விலக வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
ந.வெங்கடேசன்