பருத்தி குவிண்டாலுக்கு 15 ஆயிரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.!
திருப்பத்தூர்

பருத்தி குவிண்டாலுக்கு 15 ஆயிரம் வழங்க வேண்டும் என மாடப்பள்ளி பகுதியில் உள்ள கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் விவசாயிகள் கோரிக்கை.!
திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி பகுதியில் மாடப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் 50 ஆம் ஆண்டு பருத்தி ஏல விற்பனை துவக்க விழா கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மீனாட்சி தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பருத்தி விவசாயிகள் பருத்தி முட்டைகளை கொண்டு வந்து கூட்டுறவு விற்பனை நிலையத்தில் ஏலம் விடுவது வழக்கம்.
அதே போல் இன்று பருத்தி விற்பனை செய்ய வந்த விவசாயி மாது என்பது கூறுகையில்.
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் கடந்த மாதம் பெய்த கன மழையினால் பருத்தி செடிகளில் போதிய விளைச்சல் இல்லாமால் உள்ளது. தற்போது குறைந்த அளவில் தான் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் தற்போது பெரும் நஷ்டத்தில் உள்ளனர். எனவே தமிழக அரசு பருத்தி கொள்முதல் செய்யும் போது ஒரு குவிண்டாலுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
வியாபாரிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஏலத்தில் பங்கெடுத்து பருத்தி பஞ்சை வாங்கி செல்கின்றனர். அதனால் ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.15 நிர்ணயிக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
இந்த பருத்தி ஏலம் விற்பனை விடும் நிகழ்வில் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் தேவராஜன், துணைத்தலைவர் சாமிக்கண்ணு,
செயலாளர் அண்ணாதுரை,
ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ந.வெங்கடேசன்