அம்பலூர் பகுதியை சேர்ந்த 110 பேர் குடிமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
திருப்பத்தூர்

அம்பலூர் பகுதியை சேர்ந்த 110 பேர் குடிமனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு.!
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தாலுக்கா, அம்பலூர் பழைய காலணி மற்றும் புதிய காலணி பகுதியை சேர்ந்த சுமார் 110 பேர் தங்களுக்கு வீடும், நிலமும் இல்லை ஆகவே நாங்கள் வாழ்வதற்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் அருள் சீனிவாசன், துணை செயலாளர் இந்துமதி தலைமையில் மனு அளித்தனர்.
இந்த மனுவில் தாங்கள் அன்றாட கூலி வேலை செய்து வருவதாகவும், சிலர் வாடகை வீட்டில் இருப்பதால் தங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ந.வெங்கடேசன்