ஏலகிரி மலையில்   மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 15 கிலோ  ஹான்ஸ் , குட்கா பொருட்கள் பறிமுதல்,!

திருப்பத்தூர்

ஏலகிரி மலையில்   மளிகை கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 15 கிலோ  ஹான்ஸ் , குட்கா பொருட்கள் பறிமுதல்,!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனி படை போலீஸ்சார் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குத்தா தலைமையில் தனிப்படை போலீசார் குழு ஒன்று அமைக்கப்பட்டு தொடர்ந்து சோதனை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று  தனிப்படை போலீசார் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் இயங்கி வரும் கடைகளில் சோதனை  மேற்கொண்டனர். அப்போது அத்தனாவூரில் இயங்கி வேலு என்பவரின்  மளிகை கடையில் ஹான்ஸ் குட்கா பொருட்கள் பதிக்கையிலிருந்து விற்பனை செய்து வந்தது கண்டறிந்தனர்.பின்னர் அந்த கடையில் இருந்து 15 கிலோ ஹான்ஸ் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து ஏலகிரி மலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மேலும் கடை உரிமையாளர் வேலு  மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்