புதிய மைய நூலக கட்டடம் மற்றும் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கிய மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிய மைய நூலக கட்டடம் மற்றும் அலுவலகம் கட்டுவதற்கான கட்டுமான பணிகளை தொடங்கிய மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.3.72 கோடி மதிப்பீட்டில் புதிய மாவட்ட மைய நூலக கட்டடம் மற்றும் நூலக அலுவலக கட்டுமானத்திற்கான பூமி பூஜை நிகழ்வு 20.12.2024 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு கட்டுமான பணிகளை துவக்கி வைத்தனர்.
நூலகம் திருப்பத்தூர் நகராட்சியின் காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 13,051 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்நூலகம், பூமி பூஜை செய்யப்பட்ட நாளில் இருந்து 8 மாதங்களுக்குள், அதாவது 18.08.2025 அன்று பணிகளை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தில் தரை தளத்தில் வரவேற்பறை, நூல்கள் இருப்பு அறை, வாசிப்பு கூடம் மற்றும் நூலகர் அறை அமைக்கப்பட்டுள்ளன. முதல் தளத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவு, இரண்டாம் தளத்தில் புத்தக வாசிப்பு பகுதி மற்றும் புத்தக கிடங்கு அமைக்கப்படும். அனைத்து பிரிவுகளும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக உயர்தர வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.