ஸ்ரீ ஊர் மாரியம்மன் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா.!

ஸ்ரீ ஊர் மாரியம்மன் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா.!

திருப்பத்தூர் அருகே ஸ்ரீ ஊர் மாரியம்மன் திருக்கோயிலின் மஹாகும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று சாமி தரிசனம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கோணாப்பட்டு கிராமம் அருள்மிகு ஸ்ரீ ஊர் மாரியம்மன்  திருக்கோயில் நூதன அஷ்டபந்தன  மஹாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. 

முன்னதாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை   அன்று காலை மற்றும் மாலை நேரங்களில் யாக வேள்வி அமைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

வெள்ளிக்கிழமை  இசை,காலை 5-00 மணிக்கு மங்கள இசையுடன் வேதபாராயணம், திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் காலயாக பூஜைகள் நடைப்பெற்றது.

தாய்வீட்டு சீர்வரிசை எடுத்து வருதல், தம்பதியர் சங்கல்பம்,
108 திரவியாதி ஹோமம், லலிதா சஹஸ்ரநாம ஹோமம், ப்ரதான ஹோமம், பரிவார ஹோமம் 
நாடிசந்தானம் எனும் உயிரூட்டல் நிகழ்ச்சி மற்றும் நாமகரணம், ப்ராண பிதிரதிஷ்டை ஹோமம் நடைபெற்றது பிறகு 9 மணி அளவில் கோபுரத்தில் உள்ள ஸ்ரீ ஊர் மாரியம்மன்  பரிவார தெய்வங்களுக்கு ஒரே நேரத்தில் மஹாகும்பாபிஷேக வெகு சிறப்பாக நடைபெற்றது. 

இதில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி பராசக்தி என்று சாமி தரிசனம் செய்தனர். 


இந்நிகழ்ச்சியில் கோணாப்பட்டு  ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக் குழுவினர்கள் பலர் கலந்து கொண்டனர்
இறுதியில் கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்

ந.வெங்கடேசன்