நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயரத்தி தின கூலியாக 600 ரூபாய் வழங்க வேண்டும்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயரத்தி தின கூலியாக 600 ரூபாய் வழங்க வேண்டும்  ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் திருப்பத்தூர் மாவட்ட ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கடந்த 2020 ஆம் ஆண்டு டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தொடங்கி 4-ம் ஆண்டு  நினைவு தினத்தை முன்னிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முல்லை மற்றும் அனைத்து இந்திய விவசாயிகள் சங்கத்தின் தாலுக்கா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.  இதில் சிஐடியு ஒருங்கிணைப்பாளர் கேசவன், ஏஐடியுசி மாவட்ட அமைப்பாளர் வேணுகோபால்,  சிபிஎம் நிர்வாகிகள் ரவி, ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய அரசு விவசாயத்தை தனியாரிடம் ஒப்படைக்காதே, விவசாயிகளின் உற்பத்திக்கு குறைந்தபட்ச 50% ஆதார விலையை  அறிவித்து சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும், 

60 வயது நிறைந்த விவசாயி மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயரத்தி தின கூலியாக 600 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் சிபிஐ நிர்வாகிகள் ராஜா, ஆனந்தன் மற்றும் சிபிஎம் நிர்வாகிகள் காசி, செஞ்சிமணி, வீரமணி, வெங்கடேசன் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ந.வெங்கடேசன்