பாட்டாளி மக்கள் கட்சியினர் 500 - ற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவர் ராமதாஸை இழிவாக பேசியதை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

பாட்டாளி மக்கள் கட்சியினர் 500 - ற்கும் மேற்பட்டோர் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவர் ராமதாஸை இழிவாக பேசியதை கண்டித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள தனியார் திருமன மண்டபத்தில் வருகின்ற 21_12_024 அன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலையில் நடைபெறும் உழவர் பேரிக்க மாநில மாநாடு குறித்து பொது குழு கூட்டம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வெளியே வரும் பொழுது 200க்கும் மேற்பட்ட போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அனைவரயும் கைது செய்து பேருந்தில் ஏற்ற முயற்சித்தனர்.
அப்பொழுது பாமகவினர் மருத்துவர் அய்யாவை இழிவாக பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கண்டன கோஷங்களை எழுப்பி மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென்று சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் போலீசார் அனைவரையும் கைது செய்து திருமண மண்டபத்தில் வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் டி கே ராஜா மாநில மகளிர் அணி தலைவி நிர்மலா மற்றும் ஜோலார்பேட்டைநகர செயலாளர் ஞானமோகன் மற்றும் கிருபாகரன் குட்டிமணி. பொன்னுசாமி முன்னாள் எம்எல்ஏ நடராஜன்.மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் 500க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றனர்
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்கலாக
மாநில உழவர் பேரியக்க தலைவர் கோ ஆலயமணி. மாநில உழவர் பேரிக்க செயலாளர் வேலுசாமி பங்கேற்றனர் அனைவரையும் கைது செய்து திருமணம் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
ந.வெங்கடேசன்