கள்ளக் காதலனை கொடூரமாக வெட்டி கொன்ற கள்ளக் காதலிகள் கைது. !

கள்ளக்காதலன் கொலை

கள்ளக் காதலனை கொடூரமாக வெட்டி கொன்ற கள்ளக் காதலிகள் கைது. !

சென்னை பல்லாவரத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில்  இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வக் குமார் (வயது-22) இவர் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார். இன்னும் திருமணம் ஆகாத செல்வக் குமாருக்கு, பழைய பல்லாவரம், பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரீனா (வயது-24) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது.

ரீனாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இருக்கும் நிலையில், செல்வக்குமாருடன் ஏற்பட்ட நட்பு நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியது.

கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில், ரீனாவும், செல்வக்குமாரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

அப்போது ரீனாவின் தோழியான ரஜிதா (25) என்பவருடனும் செல்வக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரீனாவிற்கு தெரியாமல் ரஜிதாவிடமும் செல்வக்குமார் தொடர்பில் இருந்து வந்தார்.

இருவரும் இரண்டு கண்கள்

இந்த விவகாரம் ரீனாவிற்கு தெரிய வரவே, அவர் இது குறித்து தனது கள்ளக்காதலன் செல்வக்குமாரிடம் கேட்டார். அப்போது செல்வக்குமார், ரீனா, ரஜிதா ஆகிய இருவரிடமும் நீங்கள் இருவரும் எனது இரண்டு கண்கள் எனக் கூறியதோடு இருவரும் எனக்கு வேண்டும் கூறி சென்றுள்ளார்.

ரீனா,ரஜிதா இருவரிடம் தொடர்ந்து செல்வக் குமார் பிரச்சனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த இரு பெண்களும் செல்வக்குமார் உயிரோடு இருக்கும் வரை, நாம் நிம்மதியாக வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.பின்னர் இளம் தோழிகள் இருவரும் சேர்ந்து, செல்வக் குமாரை தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.

மூன்று பேரும் உல்லாசமாக இருக்கலாம்

பின்னர் தோழிகள் இருவரும் இணைந்து அதற்கான சதித் திட்டத்தை தீட்டத் தொடங்கினர். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு ரீனா மற்றும் ரஜிதா ஆகிய இருவரும், செல்வக்குமாருக்கு போன் செய்து பழைய பல்லாவரம்,சுபம் நகர் பகுதிக்கு வா, நாம் உல்லாசமாக இருக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி அழைத்தனர்.

அதை நம்பி அங்கு சென்ற செல்வக்குமாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு ரீனா, ரஜிதா இருவரும்,தங்களது ஆண் நண்பர்கள் நான்கு பேருடன் தயாராக காத்திருந்தனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் சேர்ந்து தாங்கள் ஏற்கனவே தயாராக மறைத்து வைத்திருந்த பட்டா கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் செல்வக்குமாரின் தலை, முகம் மற்றும் ஆண் உறுப்பு ஆகிய இடங்களில் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

கொடூர கொலை

இதனிடையே போலீசாருக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக யாரோ வழிப்பறி திருடர்கள் செல்வக்குமாரை தாக்கி விட்டுச் சென்றது போன்று செட்டப் செய்து விட்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல்லாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த செல்வக்குமாரை மீட்டு சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மூன்று பேர் கைது

இது குறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, பல்லாவரத்தில் பதுங்கியிருந்த 17-வயது சிறுவன் இரண்டு பெண்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞருக்கு காதல் வலை விரித்து சிக்கும் இளைஞர்களிடம் பணம் சம்பாதித்து உல்லாசமாக இரு பெண்கள் இருந்து வந்தது தெரியவந்தது.

கள்ளக்காதலான செல்வகுமார் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததால் ஆசை வார்த்தை கூறி அழைத்து நண்பர்களை வரவைத்து சரமாரியாக வெட்டி கொலை செய்தாக வாக்குமூலம் அளித்தனர்..

மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.