ஸ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவம்.!
கிருஷ்ணகிரி
ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு வசந்தப்பள்ளி ஏரிக்கரையில் அமைந்துள்ள சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கண்ட ஸ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் மூன்று மாநில பக்தர்கள் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், போலுப்பள்ளி அருகே உள்ள வசந்தப்பள்ளி ஏரிக்கரையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பிரசித்தி பெற்ற ஶ்ரீ கண்ட ஸ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ சீதா ராமர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஸ்ரீ ராம நவமி மற்றும் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் இன்று ஶ்ரீ ராம நவமியை முன்னீட்டு ஊஞ்சல் உற்சவம் மற்றும் சீதாராமர் திருக்கல்யாண வைபோகம் கோலாட்டத்துடன் துவங்கியது. ஶ்ரீ ராம நவமியை முன்னிட்டு ஶ்ரீ கண்ட ஸ்ரீ சக்ர ஆஞ்சநேயர் மற்றும் சீதாராமருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த ஶ்ரீ குருபாநதி சத்தியநாரயணா சுவாமிகள் தலைமையில் சீதா ராமர் திருக்கல்யாணம் பாரம்பரிய முறைப்படி அக்கினி சாட்சியுடன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதனையடுத்து ஊஞ்சல் உற்சவமும் மற்றும் ஸ்ரீ ராமர் பஜனைகளுடன் கோலாட்டமும் நடைபெற்றது. இந்த விழாவில் உலக நன்மை வேண்டியும், உலக மக்கள் யாவரும் நலமுடன் வாழவும், வளைகுடா நாட்டில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தை தணிக்கவும், நல்ல மழை பெய்து வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் வரவேண்டியும் பக்தர்கள் தேங்காய்கள் உடைத்து பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது,
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சீதா ராமரை ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகதில் ஓசூர், கிருஷ்ணகிரி பேரிகை என பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இந்த ராம நவமியை யொட்டி அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஶ்ரீ கண்ட ஸ்ரீ சக்ர ஆஞ்சநேயர் திருக்கோவிலை சேர்ந்த விஜயன் சுவாமிகள் சிறப்பாக செய்து இருந்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ
