சுங்கச் சாவடி கட்டணத்தை குறைக்க சமுக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கோரிக்கை. !
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் மீண்டும் சுங்க கட்டணம் உயர்வினை மத்திய அரசு கைவிட வேண்டும் சுங்க கட்டணம் உயர்வினால் விலைவாசி கடுமையாக உயரும் என்பதால், இந்த இரக்கமற்ற செயலை கைவிட வேண்டும் சமூக நுகர்வோர் பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் வலியுறுத்தல்.
தமிழ்நாட்டில் உள்ள தருமபுரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விக்கிரவாண்டி, சமயபுரம், ஓமலூர் உள்ளிட்ட 38 சுங்கச் சாவடிகளின் சுங்கக் கட்டணம் நேற்று நள்ளிரவு முதல் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 12 ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, வரி உயர்வு, கட்டண உயர்வு போன்றவற்றால் மக்கள் வாழ்வதற்கு வழி தெரியாமல் தவித்து வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அதன் பங்குக்கு சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது ஒட்டுமொத்த மக்களிடையே மிகுந்த வேதனையாக உள்ளது.
இதில் ஒவ்வொரு சுங்கச் சாவடியிலும் ஊர்திகளைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ 150 வரை சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுளது. நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக்கட்டணத்தில் முறையாக சாலைகளை பராமரிக்கப்படாததால் சாலைகள் மிகவும் தரமற்ற நிலையில் இருப்பதால் விபத்துகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
இதனால் சுங்கக் கட்டண உயர்வு வாகனம் வைத்திருப்பவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து தனியார் வாகனங்களின் வாடகை உயர்த்தப்படும். சரக்குந்துகளின் வாடகை உயர்த்தப்படும் என்பதால் அதற்கு இணையாக அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயரக்கூடும்.
இதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டும், அவர்களின் துயரங்களைக் குறைக்கும் வகையிலும், நடைமுறைப் படுத்தப்படவுள்ள சுங்கக் கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என லாரி உரிமையாளர்கள் மற்றும் சமுக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கோரிக்கை விடுத்தார்.
செய்தியாளர்
மாருதி மனோ