தமிழக அரசின் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் செயல்படாததை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

கிருஷ்ணகிரி

தமிழக அரசின் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் செயல்படாததை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!

தமிழக அரசின் பத்திரிக்கையாளர்கள் நல வாரியம் செயல்படாததை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.. 

கிருஷ்ணகிரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி எஸ் ஆர் சுபாஷ் ஆலோசனைப்படி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம்  சார்பில் தமிழக அரசின் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நல வாரியம் செயல்படாதவை கண்டித்து கவனி ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் மாருதி மனோகரன் தலைமை வகித்தார்.

மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம் ஆர் கஜேந்திரன் , மாநில நிர்வாக குழு உறுப்பினர் சசிகுமார்,மாவட்ட செயலாளர் பழனி,  மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன், மாவட்ட துணைத் தலைவர் மாதேஸ்வரன், சந்திரமோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் செயல்படாத நல வாரியத்தை திரும்பப் பெறக் கோரியும், தாலுக்கா   நிருபர்களை வஞ்சிக்காதே என்றும் பத்திரிக்கையாளர்களுக்கு பலன் அளிக்காத  நல வாரியம் வேண்டாம் என்றும், முதலாளிகளைக் கொண்டு இயங்கும் நல வாரியத்தை கலைத்திடு என்றும் தமிழக அரசை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கணேஷ் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் அவர்களிடம் கோரிக்கை மனுவை மாநில நிர்வாக குழு உறுப்பினர் எம் ஆர் கஜேந்திரன், மாவட்ட தலைவர் மாருதி மனோகரன், மாவட்ட செயலாளர் பழனி மற்றும் பத்திரிகையாளர்கள் கொடுத்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ