முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் .!

சென்னை

வேளச்சேரியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

சென்னை வேளச்சேரியில் அதிமுக தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டம், வேளச்சேரி மேற்கு பகுதி கழகம் சார்பில் பகுதி கழக செயலாளர் எம்.ஏ.மூர்த்தி தலைமையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் 77ம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதில் கலந்து கொண்ட ஏராளமான மக்கள் அன்னதானம் உண்டு மகிழ்ந்தனர். 

பின்னர் அனைவருக்கும் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்வில் வேளச்சேரி சரவணன், மயிலாப்பூர் பகுதி செயலாளர் உள்ளிட்ட அதிமுகவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

S S K