கண்ணகி நகரில் 196 வது வார்டு அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் இருவர் கைது.!

சென்னை

கண்ணகி நகரில் 196 வது வார்டு அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் இருவர் கைது.!

கண்ணகி நகரில் 196 வது வார்டு அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் இருவர் கைது. 

கண்ணகி நகரில் பெரிய ரவுடியாக வலம் வர எண்ணி நாட்டு வெடிகுண்டு வீசியதாக வாக்குமூலம்.

சென்னை கண்ணகி நகரில் உள்ள 196 வது வார்டு அலுவலகம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகம்,   இ-சேவை மையமும் செயல்பட்டு வருகிறது. அதிமுகவை சேர்ந்த அஸ்வினி கருணா கவுன்சிலராக உள்ளார். 

கடந்த 10ம் தேதி மாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நாட்டு வெடிகுண்டை அலுவலகம் மீது வீசி விட்டு தப்பியோடிவிட்டனர். 

இரண்டு பேரில் ஒருவர் வெளியில் நின்றிருந்ததாகவும் ஒருவர் இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியதாகவும், கையில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்துள்ளனர்.  

சம்பவம் தொடர்பாக கண்ணகி நகர் போலீஸார் நிகழ்விடத்தில் ஆய்வு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து நாட்டு வெடிகுண்டுகளை வீசிச் சென்றது யார் என தேடி வந்த நிலையில், இரு தினங்களுக்கு பிறகு நாட்டு வெடிகுண்டை வீசிய இருவர் விழுப்புரத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட சந்தோஷ் மற்றும் பார்த்திபன் இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. 

நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு சென்ற அன்று காரப்பாக்கத்தில் ஒருவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். 

7ம் தேதி அதிகாலை சேலையூர் மாடம்பாக்கத்தில் நடந்த தொடர் கொள்ளை சம்பவங்களும், தாழம்பூரில் நடந்த வழிப்பறியிலும் இவர்களும் இவர்களின் கூட்டாளிகளும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.  

கண்ணகி நகர் ஏரியாவில் பெரிய ரவுடியாக வேண்டும் என்பதற்காக நாட்டு வெடிகுண்டு வீசி பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தனர். மேலும் திருப்போரூர் மலையடிவாரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்ததாகவும் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர்

S S K