பரோல் நீட்டிப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து தமுமுக தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் MLA உடன் சிறைவாசிகள் சந்திப்பு.!

சென்னை

பரோல் நீட்டிப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து தமுமுக தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் MLA உடன் சிறைவாசிகள் சந்திப்பு.!

சிறைவாசிகள்_சந்திப்பு 

பரோல் நீட்டிப்பில் உள்ள சிக்கல்கள் குறித்து தமுமுக தலைவர் M.H.ஜவாஹிருல்லாஹ் MLA உடன் சிறைவாசிகள் சந்திப்பு

25ஆண்டுகளுக்கும் மேலாக சிறைதண்டனை அனுபவித்த சிறைவாசிகள். தமிழ்நாடு அரசின்  மனிதாபிமான பரிந்துரையின் அடிப்படையில் நீதீமன்ற இடைக்கால பரோலில் இருந்து வந்தனர்.

சமீபத்தில் அதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை குறித்து சிறைவாசிகள் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் பெருந்தகை ஜவாஹிருல்லாவை தமுமுக தலைமையகத்தில் சந்தித்து பேசினர்.

சந்திப்பில் மத பாரபட்சமற்ற பொதுமன்னிப்பு,மற்றும் விடுதலைக்காக தமுமுகவின் தொடர் போரட்டங்களுக்கும். இஸ்லாமிய சிறைவாசிகளின் பரோல் மற்றும் விடுதலைக்கான பணிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் நீண்டகால பரோல் மற்றும் நிரந்தர பொதுமன்னிப்புக்கு சட்டரீதீயாக இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு அனைத்து தகுதிகள் உள்ளதையும், அதற்க்கான பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளையும் சுட்டிகாட்டினர்.அரசின் கவனத்திறக்கு இக்கோரிக்கைளை எடுத்து சென்று நிவராணம் பெற்றுதரவும் கோரினர்.

மேற்கண்ட விஷயங்களில்
கோவை இஸ்லாமியகூட்டமைப்பின் சார்பான  ஆலோசனைகளையும் ஆதரவுகளையும். கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் ம.ம.க தலைமை பிரதிநிதியுமான கோவை சுல்தான் அமீர் வாயிலாக தலைவர்  தெரிவிக்கப்பட்டது.

அனைத்து விவரங்களையும் கேட்டறிந்த ம ம க தலைவர் இந்தப் பிரச்சினைகளில் தமுமுகவின் கடந்தகால தொடர் போரட்டங்களையும், மற்றும் தற்கால தொடர்முயற்சி்களையும் சுட்டிகாட்டி அதன் வாயிலாக பல சகோதர்கள் சிறை மீண்டதையும் மீதம் உள்ள அனைவரும் பரோல்வாயிலாக அன்றாடவாழ்வில் இணைந்தையும் நினைவுபடுத்தியதுடன். தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்களையும் அரசுமற்றும் அதிகாரிகளின் கவனத்திறக்கு கொண்டு சென்று நல்ல தீர்வுகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.