திருக்கோயிலுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி அருள்மிகு ஆஞ்சனேய சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில், திருக்கோயிலுக்கு சொந்தமான பயன்பாட்டில் இல்லாத நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,துவக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
உடன் தருமபுரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ச.கிருஷ்ணன், கிருஷ்ணகிரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இராமுவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
