சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது.!

தென்காசி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது.!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம் மூலம் கணவரை இழந்த பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்ததை மேம்படுத்தும் நோக்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டது.

ஆலங்குளம் மற்றும் கடையநல்லூர் வட்டாரத்திலுள்ள 60 பெண்களுக்கு 45 நாட்கள் இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு பயிற்சி நிறைவு பெற்றதை முன்னிட்டு  பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு இன்று  சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வைத்து  மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்,  வழங்கினார்.

செய்தியாளர்

AGM கணேசன்