இலஞ்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான  ஏற்பு கூட்டம் .!

தென்காசி

இலஞ்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான  ஏற்பு கூட்டம் .!

இலஞ்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான  ஏற்பு கூட்டம்

திண்டுக்கல் ஐ.லியோனி பங்கேற்பு

தென்காசி செப் 21

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு கூட்டம் தென்காசி மாவட்டம் இலஞ்சி சிற்றாற்று வீரியம்மன் கோவில் திடலில் வைத்து நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் தலைமை வகித்தார்.மாவட்ட துணை செயலாளர்கள் கனிமொழி, கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, சேசுராஜன், தலைமை பொதுக் குழு உறுப்பினர் சாமித்துரை, இலஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் சின்னத்தாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இலஞ்சி பேரூர் கழக செயலாளரும் பேரூராட்சி மன்ற துணைத் தலைவருமான முத்தையா வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம் தொகுப்புரை ஆற்றினார். மாநில கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக வாரிய தலைவருமான திண்டுக்கல் ஐ.லியோனி, மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மாநில மருத்துவ அணி இணைச் செயலாளர் மருத்துவர் கலை கதிரவன், கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி பார்வையாளர்  நெளஷாத் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந் நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சீனித்துரை, சிவக்குமார், திவான் ஒலி, பொன் செல்வன், மணிகண்டன், நகர செயலாளர்கள் சாதிர், கணேசன் பேரூர் செயலாளர்கள் முத்தையா, பண்டாரம், சுடலை சங்கர் என்ற குட்டி, மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் கிருஷ்ண ராஜா, சண்முகநாதன், சங்கீதா, திவ்யா, முகமது இஸ்மாயில், முஹம்மது அலி, இசக்கி பாண்டியன், அழகு தமிழ் சங்கர், உள்ளாட்சி நிர்வாகிகள் ஷேக் அப்துல்லா, சின்னத்தாய், மாவட்ட மகளிர் அணி மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் பேபி ரஜப் பாத்திமா, மல்லிகா, கற்பக செல்வி, ராஜேஸ்வரி,  ஒன்றிய நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், ஆனந்தன், இசக்கி பாண்டி, இலஞ்சி குமார கோயில் அறங்காவலர் குழு தலைவர் பூவையா, இலஞ்சி பேரூர் நிர்வாகிகள் ராமச்சந்திரன், இசக்கியம்மாள், அருணாசலம், சுடலையாண்டி, ஜெயக்குமார் பாண்டியன், சுப்பிரமணியன், கணேசமூர்த்தி, தேவி சிவகுமார், மருதாச்சலம், பூதத்தான், அங்கப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்