38,000 பாடல்கள் பாடிய பிரபல பாடகரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்த 4 கிமீ வரை வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்.!
அஸ்ஸாம்

தமிழில், பாம்பே திரைப்படத்தில் இடம்பெற்ற 'உயிரே.. உயிரே', கஜினியில், 'சுற்றும் விழிச்சுடரே..' உட்பட சுமார் 38000 பாடல்களை பாடியவர் ஸுபீன் கார்க்.
இவர் தமிழ், அஸ்ஸாமி, ஹிந்தி, வங்க மொழிகளில் முண்ணனி பாடகராக இருந்து வருகிறார். இவரது பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. பாலிவுட்டில் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. ஹிந்தியில் கேங்க்ஸ்டர் படத்தில் இடம்பெற்ற, 'யா அலி' என்கிற பாடலுக்கு பல லட்ச ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் செப்டம்பர் 19ம் தேதி ஸுபீன் கார்க் சிங்கப்பூரில் பாராகிளைடிங் விளையாட்டில் ஈடுபட்டபோது கடலில் விழுந்து படுகாயம் அடைந்ததால் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது.அஸ்ஸாமின் அடையாளங்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஸுபீனின் இந்த திடீர் மறைவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முக்கியமாக, அஸ்ஸாம் மாநில ரசிகர்கள் பலரும் கண்ணீர் சிந்தியபடி இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். தற்போது, இறுதிச்சடங்கிற்காக ஸுபீன் கார்க்கின் உடல் அஸ்ஸாம் கொண்டுவரப்பட்டுள்ளது.இவரது உடல் நாளை செப்டம்பர் 23ம் தேதி நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், மாநிலத் தலைநகர் கௌகாத்தியில் மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
அங்கு ஸுபீனின் உடலுக்கு 4 கிலோ மீட்டர் தூரம் வரை வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர் . அசாமில் இறுதி அஞ்சலியில் அதிக மக்கள் கலந்துகொண்டது ஸுபினின் மறைவுக்குத்தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் மறைந்ததிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்தில் பல பகுதிகளில் 3 நாட்களாக கடைகள் அடைக்கப்பட்டு இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.