தக்லைப் பிரச்சினையால் சொந்த மாநிலத்திலேயே பெரும் பிரச்சினையில் சிக்கி தவிக்கும் சிவராஜ்குமார். !
தக்லைப்

கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் சிவ்ராஜ்குமார் தக்லைப் படம் சார்ந்த சர்ச்சையில் சிக்கி தவிப்பது பெரும் பரபரப்பான பேசும் பொருளாகியுள்ளது கர்நாடக மாநிலத்தில்.
இதற்கு காரணம், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தக் லைஃப்' திரைப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதே.
'தக் லைஃப்' சர்ச்சையின் பின்னணி
இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் "கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது" என கூறிய கருத்து கர்நாடகாவில் பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இதை தொடர்ந்து, கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை (KFCC) மற்றும் பல கன்னட அமைப்புகள், கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டாலன்றி 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் வெளியிட முடியாது என அறிவித்தன.
சிவராஜ்குமாருக்கு எதிராக கோரிக்கை
இந்த சர்ச்சையில், சிவராஜ்குமார் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பேசியதாகவும், அவரது நட்பு கர்நாடக மொழி உணர்வுக்கு எதிராக இருப்பதாகவும் சில அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. சிலர், "சிவராஜ்குமார் கமல்ஹாசனை ஆதரிக்கிறார் என்றால், அவருடைய படங்களையும் கர்நாடகாவில் தடை செய்ய வேண்டும்" என வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகா கலை மற்றும் கலாச்சார அமைச்சர் மற்றும் சில எம்.எல்.ஏ.க்கள், "கமல் ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது படங்களும், அவருடன் நடித்துள்ளவர்களின் படங்களும் தடை செய்யப்படும்" என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது சிவராஜ்குமார் படங்களுக்கும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
ரசிகர்கள் மற்றும் திரையுலக அதிர்ச்சி
சிவராஜ்குமார், தந்தை ராஜ்குமார் போலவே, கர்நாடகாவின் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர். ஷிவண்ணா என்று அன்போடு அழைக்கப்படுபவர். அவர் நடித்த ஜோகி திரைப்படம் சிவராஜ்குமாரை மிகப்பெரிய மாஸ் ஹீரோவாக உருவாக்கியது. அப்படிப்பட்ட, அவருக்கு சொந்த மாநிலத்தில் இப்படியான தடைகள் வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "ஒரு நடிகர் நடிக்கும் படத்தில் அவர் கருத்து சொல்லாதபோதும், அவரும் தண்டனைக்கு ஆளாக வேண்டுமா?" என்ற கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது.
சிவராஜ்குமார் பதில்
சிவராஜ்குமார் இதுகுறித்து, "கமல்ஹாசன் எனக்கு குடும்பம் போன்றவர். ஆனால், கன்னட மொழிக்கு என் மரியாதை என்றும் குறையாது. மொழி பற்றும், கலாச்சார பற்றும் உண்மையான செயலில் இருக்க வேண்டும்" என சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இருப்பினும், அவரது விளக்கம் பல அமைப்புகளை சமாதானப்படுத்தவில்லை.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டதால், 'தக் லைஃப்' திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், சிவராஜ்குமார் நடித்த படம் அவரது சொந்த மாநிலத்திலேயே முதல் முறையாக தடைக்கு உள்ளாகியுள்ளது.
விளம்பர தொடர்பிற்கு
97 87 41 64 86