700 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தத சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு. !

கிருஷ்ணகிரி

700 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தத சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு. !

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஒன்றியம், பந்திகுறி கிராமத்தின் அருகிலுள்ள மலைப்பகுதியில் மக்கள் இரும்பினை உருக்க பயன்படுத்திய குழாய்கள் குறிப்பாக சுடுமண் குழாய்கள் மற்றும் இரும்பு உருக்கிய போது அதிலிருந்து வெளிப்பட்ட கசடு ஆகியவற்றை  வரலாற்று எச்சங்களை தேடி ஆய்வுப்ப்யணம் மேற்கொண்டபோது டாக்டர் பாலாஜி அவர்கள் கண்டெடுத்தார். அதை  உடனடியாக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்துவதற்காக கொண்டு வந்து கிருஷ்ணகிரி அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார் அவர்களிடம்  ஒப்படைத்தார்.

கண்டெடுத்த சுடுமண் குழாய் உள்ளிட்ட அனைத்தும் சுமார் 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது என காப்பாட்சியர் சிவகுமார் அவர்கள் தெரிவித்தார்.

செய்தியாளர் 

மாருதி மனோ