தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் .!

தென்காசி

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல் .!

தென்காசியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தகவல்

தென்காசி செப் 23

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடை பெற உள்ளது.

இக் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே அனைத்து வட்டார விவசாயிகளும் கலந்து கொள்வதோடு மனுவில் தங்களது கைபேசி எண்ணையும் குறிப்பிட கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விவசாய குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்படும் மனுவிற்கான ஒப்புகையும் மனுவின் கோரிக்கை தொடர்பான விவரங்களும் அனைத்து வகை கைபேசிகளிலும் பார்க்கும் வண்ணம் செயலி வாயிலாக குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். இக்குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயம் தொடர்பான தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயனடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் 

AGM கணேசன்