தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சி பா ஆதித்தனார் பிறந்த நாள் விழா .!
தென்காசி

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் சி பா ஆதித்தனார் பிறந்த நாள் விழா
தென்காசி செப் 27
சிபா ஆதித்தனார் 121 வது பிறந்த நாள் விழா அகரக்கட்டில் உள்ள தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட சிபா ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி ஆதித்தனாருக்கு புகழ் சேர்த்தார்.
இந்த நிகழ்வில் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று சூளுரைத்து தமிழை மீண்டும் தமிழனுக்கு மீட்டுக் கொடுத்த பெருமைக்குரியவர் சிபா ஆதித்தனார்., சட்டமன்ற சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சட்டசபை விதிகள் ஆங்கிலத்தில் இருந்ததை தமிழில் மொழிபெயர்த்து தமிழிலேயே அனைத்து நடை முறைகளையும் சட்டமன்றத்தில் கொண்டு வந்த பெருமைக்குரியவர். பார் அட்லா படித்தவர்.
தமிழகத்தில் முதன் முதலில் பசுமை புரட்சி ஏற்படுத்தியவர் தமிழகத்தில் நவீன அரிசி ஆலைகளை முதன் முதலில் கொண்டு வந்தவர் அதிகமான கிணறுகளையும் அதிகமான ஆழ்துளை கிணறுகளையும் தமிழகத்தில் விவசாயத்திற்கு உருவாக்கியவர் ஆதித்தனார் என்று புகழாரம் சூட்டினார்.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் பொருளாளர் சுப்ரமணியன் கிளைத்தலைவர் ஆல்பர்ட் .விஜயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்