கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், 12 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் கடனுதவியும், ரூ.2 இலட்சத்து 13 ஆயிரத்து 500 மானியத் தொகை வழங்கப்பட்டது. !
கிருஷ்ணகிரி

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்கு "கலைஞர் கைவினைத் திட்டம்” மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட பட்டியல் பழங்குடியின தொழில்முனைவோர்கள் "நிறைந்தது மனம்" நிகழ்ச்சியின்போது நன்றியை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் "கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ், 12 பயனாளிகளுக்கு ரூ.8 இலட்சத்து 50 ஆயிரம் கடனுதவியும், ரூ.2 இலட்சத்து 13 ஆயிரத்து 500 மானியத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியல் பழங்குடியினருக்கு தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்க 16 சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., தகவல்.தெரிவித்துள்ளார்.
சௌய்தியாளர்
மாருதி மனோ