பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி கைதானவருக்கு ஆதரவாக இருக்கும் உதவி காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் .!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி கைதானவருக்கு ஆதரவாக இருக்கும் உதவி காவல் ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கிருஷ்ணகிரி, காந்திரோடு பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் ராயப்ப முதலி தெருவை சேர்ந்தவர் ராகவேந்திரா குப்தா, இவருக்கு, ரவி கடந்த ஓராண்டிற்கு முன்பு ரூ 34 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
ஆனால் ராகவேந்திர குப்தா பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. அவர் மீது கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், காட்டிநாயனப்பள்ளியை சேர்ந்த முனுசாமி என்பவர் கொடுத்த புகாரின் பெயரில், ராகவேந்திர குப்தாவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரது மனைவி வைஷ்ணவி, தந்தை பத்ரிநாத், தாய் உமாராணி ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ராகவேந்திர குப்தா வாங்கிய, 34 லட்சம் ரூபாய் கடனுக்கான காசோலையை ரவியிடம் கொடுத்துள்ளதையடுத்து ரவி கடந்த, 15 ம் தேதி, வங்கியில் டிபாசிட் செய்த போது அந்த காசோலை ரிட்டன் ஆனது. இது குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டது. இந்த வழக்கின் நகல் ரவிக்கு கிடைக்கும் முன், இந்த வழக்கை விசாரிக்கும் உதவி காவல் ஆய்வாளர் பூபதி, வேலுார் சிறைக்கு சென்று ராகவேந்திர குப்தாவிடம் வழங்கி உள்ளார்.
மேலும் இந்த வழக்கில் ராகவேந்திர குப்தாவை காப்பாற்றும் வகையில் உதவி காவல் ஆய்வாளர் பூபதி கட்ட பஞ்சாயத்து செய்து எங்களை மிரட்டி வருவதைத் வருவதைக் கண்டித்தும், சிறையில் உள்ள ராகவேந்திர குப்தாவிடம் இருந்து ரூ. 34 லட்சத்தினை மீட்டுத் தர வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவினை கொடுத்தனர்.
பின்னர் இது குறித்து பேசிய பாதிக்கப்பட்டவர்கள் கடனுக்காக 34 லட்சம் பணம் ராகவேந்திர குப்தா என்பவரிடம் கொடுகப்பட்டது. ஆனால் இது வரை பணம் கொடுக்கவில்லை. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் இல்லை, காரணம் இந்த வழக்கை விசாரிக்கும் உதவி காவல் ஆய்வாளர் பூபதி ராகவேந்திர குப்தாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
ஆகையால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை அவர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு 34 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றி வரும் ராகவேந்திர குப்தாவிடம் இருந்து பணத்தினை பெற்றுத்தர வேண்டும். தலைமறைவாக உள்ள ராகவேந்திர குப்தாவின் குடும்பத்தினரை கைது செய்து, ராகவேந்திர குப்தாவுக்கு ஆதரவாக செயல்படும் உதவி காவல் ஆய்வாளர் பூபதி மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ