அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மண்டல பூஜையினையொட்டி வாண வேடிக்கையுடன் கூடிய மாவிளக்கு ஊர்வலம் .!

கிருஷ்ணகிரி

அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மண்டல பூஜையினையொட்டி வாண வேடிக்கையுடன் கூடிய மாவிளக்கு ஊர்வலம் .!

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னபனமுட்லு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மண்டல பூஜையினையொட்டி வாண வேடிக்கையுடன் கூடிய மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள சின்னபனமுட்லு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவிலின் மஹா கும்பாபிஷேக விழா, யாககால பூஜைகளுடன் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது,

மஹா கும்பாபிஷேகத்தினைத் தொடர்ந்து 48 நாள்களுக்கான மண்டல பூஜைகள் துவங்கியது. இதில் சின்னபனமுட்லு மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து மேளதாளம் மற்றும் கிராமிய கலையுடன் மாவிளக்குகளுடன் பெண்கள் ஊர்வலமாக அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோவிலுக்கு வந்தனர்.

பின்னர்  மாவிளக்குகளுடன் கொண்டு வந்த பூஜை பொருள்களை ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு காணிக்கையாக கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொடுத்த பூஜை பொருள்களைக் கொண்டு ஶ்ரீ முத்துமாரியம்மனுக்கு. சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டு வாண வேடிக்கையுடன் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்கார தீபாராதனைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளூம் நடைபெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த 
ஶ்ரீ முத்துமாரியம்மனை ஏராளமான மக்கள் தரிசனம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து மண்டலபூஜையைத் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த மண்டல பூஜைக்கான ஏற்படுகளை சின்ன பனமுட்லு கிராமத்தை சேர்ந்த குப்புசாமி, பெரிய முனி, மாரியப்பன், முனியம்மாள், சின்னதம்பி, அண்ணாமலை, ஜெயராமன் கோவில் பூசாரி பிரகாசம் ஆகியோர் சிறப்பாக 
செய்து இருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ