தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!
தென்காசி
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தென்காசி நவ 02
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது
முன்னதாக தமிழகத்தில் இந்து முன்னணியின் முதல் தலைவர் என்ற பெருமைக்குரிய தானுலிங்க நாடார் 37 வது ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தானுலிங்க நாடார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந் நிகழ்வில் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது வருகிற பத்தாம் தேதி நாடார் சமுதாயத்தின் விழிப்புணர்வு பிரச்சார பயணம் தொடங்குவது பற்றி ஆலோசனை கூட்டம் குற்றாலத்தில் நடை பெறும் என்றும் மேலும் தானுலிங்க நாடார் தமிழகத்தில் முதல் இந்து முன்னணி தலைவராக சிறப்பாக செயலாற்றியவர் தமிழகத்தில் இந்து மக்களின் எழுச்சிக்கு வித்திட்டவர் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று மக்களுக்காக போராடியவர் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் குமரி மக்களின் வளர்ச்சிக்கும் கல்விக்கும் அதிகமாக உழைத்தவர் மேடைகளில் கதைகள் சொல்லி மக்களை புரிய வைத்தவர்.
1988 ஆம் ஆண்டு ஏரல் நகரில் நடைபெற்ற டாக்டர் ஷெட்கேவார் நூற்றாண்டு விழாவில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது மாரடைப்பால் காலமானார். தானுலிங்க நாடாரின் இழப்பு ஒட்டுமொத்த இந்து மக்களுக்கும் தமிழர்களுக்கும் பேர் இழப்பாகும் தானுலிங்க நாடாரின் 37 வது ஆண்டு நினைவு நாளில் தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் அவருடைய திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவோம் எனகூறினார்.
இந் நிகழ்ச்சியில் சுப்பிரமணியன் கிழக்கு மாவட்ட தலைவர் கன்னராஜ் கடையநல்லூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன் இளைஞர் அணி தலைவர் கார்த்திகைகுமார் ஒன்றிய துணைத் தலைவர் சக்திவேல் சாம்பார் வடகரை கிளை இளைஞரணி செயலாளர் சித்திரை குமார் மத்தளம் பாறை சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
