தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க செயற்குழு கூட்டம்.!
தென்காசி
தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த பா.ம.க செயற்குழு கூட்டம்
தென்காசி நவ 02
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் -தலைவர் மருத்துவர் ராமதாஸ் ஆணைக்கினங்க கட்சியின் செயல் தலைவர் ஸ்ரீ காந்தி இராமதாஸ் ஒப்புதலோடு தென்காசி மாவட்ட ஒருங்கிணைந்த செயற்குழு கூட்டம் தென்காசியில் அமைந்துள்ள எஸ்தர் காட்டேஜ் சக்தி நகரில் நடை பெற்றது.
இந்த கூட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிங்கராயன் தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ண குமார் வரவேற்புரை ஆற்றினார் இந்த கூட்டத்திற்கு கட்சியின் மேற்பார்வையாளராக மாநில துணை தலைவர் அய்யம் பெருமாள் பிள்ளை திருமலை குமாரசாமி யாதவ் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் திருமலைச்சாமி மாவட்ட தொழிற்சங்க செயலாளர் சுசி சுந்தர் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் சிவராஜ் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் கிருஷ்ணன் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வாசுதேவநல்லூர் சாமி மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார் மாவட்ட துணைச் செயலாளர் குலசேகரன் மாவட்ட துணைச் செயலாளர் பள்ளக்கால் கிருஷ்ணன் மாவட்ட அமைப்புச் செயலாளர் வீரபாண்டியன் கடையநல்லூர் நகர் மன்ற உறுப்பினர் மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ் மகளிர் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமாரி மகளிர் சங்க மாவட்ட தலைவி மகேஸ்வரி ,. சங்க மாவட்ட செயலாளர் செல்வி மகளிர் சங்க மாவட்ட செயலாளர் தனலட்சுமி மற்றும் செயற்குழு உறுப்பினர் கலந்து கொண்டனர் முடிவில் வழக்கறிஞர் ராமராஜ் , தென்காசி நகரத் தலைவர் சாகுல் ஹமீது ஆகியோர் நன்றி கூறினர்.
செய்தியாளர்
AGM கணேசன்
