தென்காசியில் காங்.சிறுபான்மை துறை மாநில தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி.!
தென்காசி
தென்காசியில் காங்.சிறுபான்மை துறை மாநில தலைவர் பிறந்தநாள் நிகழ்ச்சி
மாவட்ட தலைவர் சலீம் தலைமையில் நடைபெற்றது
தென்காசி அக் 24
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை
மாநில தலைவர் முகம்மது ஆரிஃப் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் உள்ள உள்நோயாளிகளுக்கு தென்காசி மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் சலீம் தலைமையில் பிரட் பழங்கள் பிஸ்கட் வழங்கப்பட்டது.


இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட பொது செயலாளர் சர்தார் பொருளாளர் ரஷீத் கான் மாவட்ட துணை தலைவர்கள் புளியங்குடி ஜாகீர் உசேன் காஜா மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் நகர தலைவர்கள் தென்காசி ஜேக்கப் செங்கோட்டை செய்யது சுலைமான் புளியங்குடி ஜாகீர் மற்றும் தென்காசி நகர செயலாளர் செய்யது அலி அச்சன் புதூர் ஊராட்சி தலைவர் ஜபார் அலி முகம்மது அலி ஜின்னா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை தென்காசி நகர தலைவர் ஜேக்கப் செங்கோட்டை நகரத் தலைவர் செய்யது சுலைமான் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
