தென்காசியில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மறியல் போராட்டம் 99 பேர் கைது.!

தென்காசி

தென்காசியில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மறியல் போராட்டம் 99 பேர் கைது.!

தென்காசியில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மறியல் போராட்டம் 99 பேர் கைது.!

தென்காசி, டிச - 04

தென்காசியில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதில்  கலந்து கொண்ட 15 பெண்கள் உட்பட 99 பேர் கைது  செய்யப் பட்டனர்.

2021 ஆம் ஆண்டு மே மாதம்  7 ஆம் தேதி பதவி ஏற்று கொண்ட திமுக அரசு தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை குறிப்பாக  பழைய பென்ஷன் திட்டம், சத்துணவு அங்கன்வாடி கிராம ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட சிறப்பு காலமுறை தொகுப்பூதியம் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியத்தினை வழங்கி அவர்களுக்கு சட்டபூர்வமான ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 

 எனவே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று மறியல் போராட்டம் நடத்தினர். அதன்படி இன்று தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயில் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின்  மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் 
தலைமை வகித்தார். .

மாவட்டத் துணைத் தலைவர்கள் 
இசக்கித்துரை, சண்முகம், சிதம்பர சக்தி, முத்து மாரியப்பன், மாவட்ட இணைச் செயலாளர் .
அன்பரசு, மாநில செயற்குழு உறுப்பினர் பிரகாஷ், மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி வட்ட செயலாளர் மனோகர் 
வரவேற்புரை ஆற்றினார் 

மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.

தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் 
 துரைசிங்  சிறப்புரை ஆற்றினார் மாவட்ட செயலாளர்  சங்கர நாராயணன் 
மேனாள் மாவட்ட தலைவர் தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் 
முருகன்,தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் 
ராஜசேகர் மற்றும் தோழமை சங்க நிர்வாகிகள் கணபதி ராமன், ரா‌மராஜ், சேகர்,தமிழ்நாடு 
அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர்கள் கோபி மாடசாமி,மாரிமுத்து மக்கள் நல பணியாளர் சங்க பொதுச் செயலாளர் புதியவன் செந்தில் கணேசன்,அகஸ்டின், பாபுராஜ், சுப்புராஜ், மோகன்ராஜ் பெலிக்ஸ் மோனிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தென்காசி காவல் துணைக் கண்காணிப்பாளர் , காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும்  தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழ்நாடு அரசு எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற தவறினால் 2026 ஜனவரி முதல் வாரம் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட 15 பெண்கள் உட்பட 99 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர்

AGM கணேசன்