கானத்தூரில் பட்ட பகலில் கணவன் மனைவி இருவரையுப் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் கைது.!

சென்னை

கானத்தூரில் பட்ட பகலில் கணவன் மனைவி இருவரையுப் கத்தியால் குத்திக் கொலை செய்த நபர் கைது.!

கானத்தூரில் பட்ட பகலில் கணவன் மனைவி கத்தியால் குத்திக்  கொலை. 

ஆதரவின்றி தவிக்கும் இரண்டு பிள்ளைகள். 

கொலை செய்த நபரை கைது செய்து போலீஸார் விசாரணை. 

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கானத்தூர் ரெட்டி குப்பம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்(எ) பார்த்தசாரதி(42), இவரது மனைவி ஜமுனா, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக குழந்தைகளுடன் சைதாப்பேட்டையில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

இதனால் பார்த்தசாரதி தனியாக வசித்து வந்துள்ளார்,

இவரது வீட்டின் எதிர் வீட்டில் வசித்து வரும் சுசில் தான் மனைவி பிரிந்து சென்றதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஜமுனாவிற்கும் சுசிலுக்கும் முறையற்ற உறவு இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 4.30 மணியளவில் சுசிலின் மனைவி கிரிஜாவிற்கும் பார்த்தசாரதிக்கும் வெளியில் வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்ட போது, மனைவியை வைத்து ஒழுங்காக வாழத் தெரியாதவன் என திட்டியதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பார்த்தசாரதி வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து சுசில்(35), மற்றும் அவரது மனைவி கிரிஜா(29), ஆகிய இருவரையும் கழுத்து, நெற்றி, வயிற்றில் சரமாறியாக குத்தியதில் கிரிஜா நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் சுசிலும் உயிரிழந்தார். 

இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளார். தாய் தந்தையை இழந்ததால் தற்போது ஆதரவின்றி தவித்து வருகின்றனர். 

கொலை செய்து விட்டு தப்பிச் சென்ற பார்த்தசாரதியை கானத்தூர் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

பட்டபகலில் நடந்த இந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்

        S S K