வஃபு சட்ட மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.!

சென்னை

வஃபு சட்ட மசோதா குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்.!

வஃபு சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத் நிர்வாகிகள்.!

தமிழ்நாடு தவ்ஜித் ஜமாத் மாநிலத் தலைவர் ஆர்.அப்துல் கரீம், மாநிலப் பொருளாளர் ஏ.இப்ராஹீம், மாநிலத் துணைத் தலைவர்  கே.தாவூத் கைஸர், மாநிலத் துணை பொதுச் செயலாளர் ஏ.கே.அப்துல் ரஹீம், மாநிலச் செயலாளர் ஐ.அன்சாரி ஆகியோர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, ஒன்றிய அரசு அறிமுகம் செய்துள்ள வக்ஃபு சட்டத் திருத்த முன் வடிவினை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக முதலமைச்சருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )