சார்பு அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். !

சென்னை

சார்பு அணிகளின் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். !

சென்னை தெற்கு மாவட்டக் கழகத்திற்கு  உட்பட்ட கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திருவான்மியூரில் இன்று பங்கேற்றார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள 23 Wings-ம் தி மு கழகம் இன்னும் உயர உயர பறக்க சிறகாக இருந்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் 2026-இல் ‘இலக்கு 200 - படைப்போம் வரலாறு’ என்ற முதலமைச்சரின் சொல்லை செயலாக்கிட அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் சார்பு அணி நிர்வாகிகள் உழைத்திடுவோம் என்று உரையாற்றினார்.

சென்னை தெற்கில் உள்ள மதுரவாயல், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய 5 தொகுதிகளிலும் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டிடுவோம் என்று உற்சாகமூட்டி பேசினார்.

நிகழ்வில் அமைச்சர் மற்றும் திமுக நிர்வாகிகள்,தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )