பள்ளிக்கரணையில் உள்ள காலி இடம் தங்களுக்கு தான் சொந்தம் எனக் கூறிய இருதரப்பினரிடையே வாக்குவாதம்.!
சென்னை
பள்ளிக்கரணையில் உள்ள காலி இடம் தங்களுக்கு தான் சொந்தம் எனக் கூறிய இருதரப்பினரிடையே வாக்குவாதம்.
இடம் தற்போது மாநகராட்சிக்கு கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறி இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார்.

சென்னை பள்ளிக்கரணை 189 வது வார்டு மல்லிகேஸ்வரர் நகர் பகுதியில் சுமார் நான்கு ஏக்கர் நிலம் காலியாக உள்ளது.
பள்ளிக்கரணையில் வசிக்கக்கூடிய ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இந்த இடம் எங்களிடம் தான் கடந்த 50 ஆண்டுகளாக உள்ளது நாங்கள் தான் வைத்திருந்ததாகவும் எங்களிடமிருந்து இந்த இடத்தை பறிக்க பலர் முயற்சி செய்வதாகவும் கூறுகின்றனர்.
அதேபோல் இந்த குடும்பத்தை எதிர்த்து சுமார் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து, இந்த இடம் அரசு தங்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்காக வழங்கப்பட்டதாக கூறியதால் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் முருகேசன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் இருதரப்பிரிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பின்னர் தற்போது இந்த இடம் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது எனக்கூறி இரு தரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து நீதிமன்றத்தை நாடுமாறும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க கூடாது என காவல்துறை அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்
S S K
