சோழிங்கநல்லூர் தொகுதியில் இலவச வீட்டு மனை பட்டா.!
செங்கல்பட்டு
சோழிங்கநல்லூர் தொகுதியில் இலவச வீட்டு மனை பட்டா மக்களின் கனவை நனவாக்கிய சட்டப்பேரவை உறுப்பினர். ச.அரவிந்த் ரமேஷ்!
சென்னை தெற்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குபட்ட பள்ளிக்காரணை,ஜல்லடியன்பேட்டை, மடிப்பாக்கம், உள்ளகரம், காரப்பாக்கம், ஓக்கியம் துரைப்பாக்கம், பெருங்குடி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பொது மக்கள் பட்டா வேண்டி கேட்டிருந்தனர்.

அவர்களின் நீண்ட கால கனவான பட்டாக்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, அவையெல்லாம் கணினி மயமாக்கப்பட்டு இன்று (13/02/2026)185 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ச.அரவிந்த் ரமேஷ் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கீதா,தென் சென்னை கோட்டாட்சியர்.ரங்கராஜன், சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்ட வருவாய் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் வட்ட கழக செயலாளர்கள் வ.பாபு, ஆரோன் (எ) அரசு, G.ரவி, பா.தேவகுமார், பகுதி துணை செயலாளர் வி.வி.குமரேசன், மாவட்ட பிரதிநிதிகள் பி.கே.தங்கம், டி.தேவேந்திரன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள், அனைவரும் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.
செய்தியாளர்
சுகுமாரன்
