கிராமங்களில் கல்வித் திருவிழா

கிருஷ்ணகிரி

கிராமங்களில் கல்வித் திருவிழா

மதி தொண்டு நிறுவனம் சார்பாக 'வீடும் விழிப்பும்' என்ற திட்டத்தின் மூலம் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் பெற்றோர்களுக்கு குழந்தைகளின் அடிப்படைக் கல்வி பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் மக்கள் ஆதரவோடு கல்வித் திருவிழா நடதிக்கொண்டு வருகிறது. 

இதன்  தொடர்ச்சியாக 23/03/2025 அன்று கிருஷ்ணகிரி நகரம்,  பழைய பேட்டை 4- வது வார்டில் வீடும் விழிப்பு திட்டத்தின் மூலம் குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வித் திருவிழாவும் நடைபெற்றது.

இக்கல்வித் திருவிழாவில் கிருஷ்ணகிரி கம்பன் கழக தலைவர் முனைவர் இ.ரவிந்தர் தலைமை  தாங்கினார்  மற்றும் பொருளாளர்  மு.ஸ்ரீரங்கன் வாழ்த்துரை வழங்கினார். 

மேலும்,  மு.ஜெயக்குமார்  4 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர்  அவர்கள் கலந்துகொண்டு  சிறப்பித்தார்கள். மற்றும்  பழைய பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் திருமதி இருதய மேரி அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர். 

செந்தில், மாவட்ட பொருளாளர் அவர்கள்,  வீடும் விழிப்பு திட்டத்தின் மூலம் சமூக கல்வி பணியாற்றும் கல்வி செயல்பாட்டாளர் திருமதி. தீபிகா, சரண்யா, இராஜேஸ்வரி, சரிதா, கோவிந்தி, நந்தினி, சுதா, சுவேதா மற்றும் திட்டத்தின் கிருஷ்ணகிரி ஒருங்கிணைப்பாளர் நாஜிம் பீரான் ஆகியோர்  நிகழ்ச்சியை ஒருங்கினைத்தனர். 

நகராட்சி நடுநிலைப்பள்ளி பழையபேட்டை  மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. தொடர்ந்து  அவர்களுக்கு கிருஷ்ணகிரி கம்பன் கழகத்தின் சார்பாக  பரிசுகள் வழங்கி சிற்ப்பிக்கப்பட்டது. இதில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். 

இறுதியாக வீடும்  விழிப்பு திட்டத்தின் சார்பாக திருமதி. இராஜேஷ்வரி நன்றியுரை வழங்கினார்.

செய்தியாளர்

மாருதி மனோ