கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் சார்பாகதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க விழா. !
கோவை

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரம் சார்பாக
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் 31 ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு நகர தலைமை அலுவலகத்தில் கொடியேற்று நிகழ்ச்சி நகர தலைவர் M. அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது .
மமக மாவட்ட செயலாளர் முஹம்மது அப்பாஸ் , தமுமுக நகர செயலாளர் உமர் முக்தார், மமக நகர செயலாளர் யாசர் அரபாத் மற்றும் மாவட்டத் துணை நிர்வாகிகள் , அணி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
தமுமுக கோவை வடக்கு மாவட்ட தலைவர் M. அப்துல் ஹக்கீம் அவர்கள் நகர அலுவலகத்தில் தமுமுக கொடியினை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் .
இறுதியாக தமுமுக நகர பொருளாளர் முகமது பாசில் நன்றியுரையாற்றினார் .
இந்நிகழ்வில் மாவட்டத் துணை நிர்வாகிகள் , அணி நிர்வாகிகள், நகரம் மற்றும் கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .