பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையடித்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய மேட்டுப்பாளையம் போலீசார். !
மேட்டுப்பாளையம்

பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையடித்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய மேட்டுப்பாளையம் போலீசார். !
மேட்டுப்பாளையம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம் ராஜீவ் காந்தி நகரை சார்ந்த ஆனந்தராஜ் என்பவர் கடந்த 14.09.25 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சர்ச்சுக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த 19 1/2 பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் அதியமான் மேற்பார்வையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமணன் தலைமையில் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் தனிப்படை காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்ததில்
கேரளா பாலக்காட்டைச் சேர்ந்த முகமது பஷீர் என்ற நபரை உக்கடம் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மேற்படி நபரிடம் இருந்து 10 3/4 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 5,77,000 கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படையினரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டியுள்ளார்.
ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )