முத்துகிருஷ்ண பேரி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவி தொகை எஸ் பி வழங்கினார் .!

தென்காசி

முத்துகிருஷ்ண பேரி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவி தொகை எஸ் பி வழங்கினார் .!

முத்துகிருஷ்ண பேரி உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு உதவி தொகை எஸ் பி வழங்கினார்.!

தென்காசி செப்17

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 15,73,318/- ரூபாய் பணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  முன்னிலையில் வழங்கப்பட்டது

தென்காசி மாவட்டம், வீ.கே புதூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணபேரி பகுதியை சேர்ந்த தெய்வத்திரு சங்கர் குமார், வயது 31 என்பவர் தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வந்த நிலையில் கடந்த 18.06.2025 அன்று இரவு சுமார் 08.30 மணியளவில் முறப்பநாடு அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் வாகன விபத்து ஏற்பட்ட நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஆற்றுப் பாலத்தில் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மேலும் தமிழக அரசால் நிவாரண நிதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தெய்வத்திரு. சங்கர் குமார் அவர்களுடன் 2018 ஆண்டு காவல் பணியில் இணைந்த தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களை சேர்த்த 2018 பேட்ச் காவலர்கள் மொத்தம் 3274 நபர்கள் ஒன்றிணைந்து 15,73,318 ரூபாய் தொகையை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் முன்னிலையில் இறந்த காவலரை குடும்பத்திற்கு வழங்கினார்.

செய்தியாளர்

AGM கணேசன்