இலஞ்சி ஆர்.பி.பள்ளியில் உலக புத்தக தினவிழா.!
தென்காசி

இலஞ்சி ஆர்.பி.பள்ளியில் உலக புத்தக தினவிழா
தென்காசி, ஏப் 23
தென்காசி மாவட்டம் இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல் நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உலக புத்தக தின விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பள்ளிச் செயலாளர் ஐ.சி. சண்முக வேலாயுதம் தலைமை தாங்கினார்.
உதவித்தலைமை ஆசிரியர் செல்லம்மாள் முன்னிலை வகித்தார்.
பள்ளியின் அறிவியல் ஆசிரியரும் அறிவியல் இயக்க மாவட்ட செயலாளருமான சுரேஷ்குமார் வரவேற்றார்.மாணவர்கள் இறைவணக்கம் பாடினர்.
தலைமை ஆசிரியர் ஆறுமுகம் கோடை விடுமுறையில் வெப்ப அலை வீச்சில் இருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பதனீர், இளநீர், நீர்மோர், நீர் ஆகாரங்கள், பானைக் கரம், சர்பத்,தர்பூசணி, வெள்ளரி, பப்பாளி போன்ற நீர்சத்து மிகுந்த உணவுகளை உண்டு உடல் நலம் பேன ஆலோசனை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக கொண்டலூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் , நல்லாசிரியர் மைக்கேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உலக புத்தக தின செய்தியாக
கோடை விடுமுறையில் அனைவரும் பயனுள்ள புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
இன்று அகில இந்திய அளவில் நடைபெறும் ஆட்சிப் பணி தேர்வுகளில் சாதனை புரிந்த அனைவருமே புத்தகங்களை படித்ததால் மட்டுமே என எடுத்துக் கூறி நீங்களும் சாதிக்க வேண்டும் என்று வாழ்த்தி மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். விழாவில் ஆசிரியர்கள் கற்பகம், கணேசன், இளமுருகு , அம்பலவாணன், லதா , இராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.தேசிய மாணவர் படை அலுவலர் செந்தில் பாபு நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்