அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சோக்காடி ராஜனை நேரில் நலம் விசாரித்த அசோக் குமார் Ex MP. !
கிருஷ்ணகிரி

கடந்த (13/09/2025) அன்று சாலை விபத்தில் படுக்கயமடைந்து கோயம்பத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அதிமுக கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சோக்காடி ராஜனை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான K.அசோக்குமார் MLA Ex.MP நேரில் சந்தித்து நலன் விசாரித்து மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
உடன் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கன்னியப்பன், கிருஷ்ணகிரி மாவட்ட MGR இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் பால்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் மகேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், அருண்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ