அமெரிக்க இந்தியர்களுக்கு ஆப்பு வைக்க டிரம்ப் திட்டம், H1B விசாவிற்கு கடும் நெருக்கடி. !
இந்தியா Vs அமெரிக்கா

நியூயார்க்: எல்லோரும் கிளம்ப வேண்டியதுதான்... அமெரிக்க இந்தியர்களுக்கு ஆப்பு! H1B விதிகளை கடுமையாக்கும் அமெரிக்கா வேலைவாய்ப்பு சந்தையில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வர டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கிரீன் கார்டை போலவே 'கோல்ட் கார்ட்' முறையை தீவிரமாக்கவும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் முனைப்பு காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வேலை பெற அதிகம் பயன்படுத்தப்படும் 'ஹெச்1பி' நுழைவு விசா திட்டம் மூலம் இந்தியர்களே பெரிதும் பலனடைந்து வருகின்றனர்.
2020-இல் டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில், அமெரிக்க குடிமக்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் இந்த விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டன.
அப்போது, அமெரிக்கர்களுக்கான வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் வகையில், ஹெச்1பி விசா வழங்குவதை 2021 மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும் இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
டிரம்ப் விசா
ஆனால் இப்போது, டிரம்ப் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள நிலையில், ஹெச்1பி விசா நடைமுறையில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. புதிய திட்டத்தின்படி, அமெரிக்காவில் உயர் கல்விக்காக வரும் வெளிநாட்டு மாணவர்கள் நீண்ட நாட்களாக காலவரையின்றி தங்கும் நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஹெச்1பி விதிகள்
இதனால், இனி மாணவர்களுக்கு அதிகபட்சம் 4 ஆண்டுகள் மட்டுமே தங்கும் அனுமதி வழங்கப்படும். அமெரிக்க குடிமக்கள் செலுத்தும் வரி வீணாகாமல் இருப்பதே இதற்கான காரணமாகக் கூறப்படுகிறது. மேலும், ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் போன்றோருக்கு முன்பு வழங்கப்பட்டிருந்த 5 ஆண்டு விசா மற்றும் அதனை எண்ணற்ற முறை நீட்டிக்கும் சலுகைகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன. இனி, முதல்கட்டமாக 240 நாட்கள் மட்டுமே தங்க அனுமதி வழங்கப்படும்.
கிரீன் கார்டு
பின்னர் அதனை 240 நாட்கள் வரை நீட்டிக்கலாம். ஆனால், அந்த நீட்டிப்பு அந்த பணிக்கு வரும் ஊழியர்களின் பணிக்காலத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. அத்துடன், நிரந்தர குடியுரிமை அட்டை (கிரீன் கார்டு) வழங்கும் நடைமுறையிலும் மாற்றங்களை கொண்டு வர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கி வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு சிக்கல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கோல்டு கார்டு
இந்தியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஐ.டி. நிபுணர்கள் மற்றும் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்து வருகின்றனர். எனவே, புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டால் இந்தியர்களுக்கு பெரும் சவால் ஏற்படலாம் என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், அமெரிக்காவில் பணக்காரர்கள் நிரந்தரமாக வசிப்பதற்கு தங்க அட்டை எனும் "கோல்டு கார்டு" திட்டத்தை அறிமுகம் செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
இந்திய இளைஞர்கள்
இந்த "கோல்டு கார்டு" விலை 5 மில்லியன் டாலராக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.43 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையை பாதுகாக்கும் நோக்கில், வெளிநாட்டு தொழிலாளிகளுக்கு வாய்ப்புகளை குறைக்கும் இந்த நடவடிக்கை இந்திய இளைஞர்களின் கனவுகளுக்கு பெரிய தடையாக அமையக்கூடும். இதுவும் இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் ஒருவித எதிர்ப்பு நடவடிக்கை தான் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.