ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முக நாதர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக வருடாந்திர விழா .!
கிருஷ்ணகிரி

செட்டிமாரம்பட்டி குமரகிரி மலை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முக நாதர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக வருடாந்திர விழாவினை முன்னிட்டு சிறப்பு அலங்காரபூஜைகள் நடைபெற்றது, இதில் ஏரளமான பக்தர்கள் பால் குடங்களுடன் கலந்துக் கொண்டு சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், செட்டிமாரம்பட்டி அருகே உள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தில் மலை குன்றின் மேல் அமைந்துள்ள குமரகிரி மலை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முக நாதர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக வருடாந்திர விழாவினை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
வருடாந்திர மஹா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்யா வசனம் கலச ஸ்தாபிதம், கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவகிரக ஹோமம், சுப்பிரமணிய ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து செட்டிமாரம்பட்டி, மலையாண்டஅள்ளி, கிருஷ்ணன் கொட்டாய் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பெண்கள் மேளதாளங்களுடன் பால் குடங்களை எடுத்து வந்தனர். பின்னர் ஆலயத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முக நாதருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
பின்னர் குமரகிரி மலை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முக நாதருக்கு மஹா அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாதனைகள் நடைபெற்றது.
இதனையடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த குமரகிரி மலை ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதரை
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
மேலும் இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கிழக்கு மாவட்ட தலைவருமான சுப்பிரமணி மற்றும் ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு திருக்கோவிலில் நடைப்பெற்ற சிறப்பு அன்னத்தானததிட்டத்தினையும் துவக்கி வைத்தனர்
மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான புவன் ராஜ், சிவானந்தம், கோவிந்தசாமி, சின்னசாமி, காந்தி முருகன், மாது, பெருமாள், வெங்கட்ராமன், அருள், தேவராஜ், உள்ளிட்ட விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்து இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ