புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில் (சென்னை சாலை) 14.09.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதையொட்டி, மேடை, பயனாளிகள் அமரும் இடம், துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.,, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
உடன் மகளிர் திட்ட இயக்குநர் பி.பெரியசாமி, வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மகாதேவன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
