அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப., சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் மற்றும் சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் பங்கேற்பு.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ்குமார், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து முகாமினை துவக்கி வைத்தனர்.
மேலும் இந்தநலம் காக்கும் இந்த சிறப்பு மருத்துவ முகாமில் பொது மருத்துவம் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் மருத்துவர்கள் கலந்துக் கொண்டு சிகிக்சைகள் மேற்கொண்டனர்
அப்போது சமுக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திர மோகனிடம் நலன் காக்கும் மருத்துவ அடையாள அட்டையினை சட்ட மன்ற உறுப்பினர் மதியழகன் வழங்கினார்.
இந்த சிறப்பு மருத்துவ முகாமில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
