ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா.!

கிருஷ்ணகிரி

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா.!

ஏரியூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா. 

தர்மபுரி  மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஏரியூர் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  நான்காவது ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 

தமிழ்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. சிறப்பு  விருந்தினர்கள் குத்து விளக்கு ஏற்றி நிகழ்வை தொடங்கி விழாவின் தொடக்கமாக வணிகவியல் துறை  தலைவர் முனைவர்.சி. நடராஜன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு  தலைமை தாங்கிய முதலவர் முனைவர். நாகராஜன்  2025-2026 க்கான ஆண்டு அறிக்கையை வாசித்தார். விளையாட்டு துறைக்கான அறிக்கையை  உடற்கல்வி துறை இயக்குநர் (பொறுப்பு) முனைவர். பெ.சு.ராஜா  2025 - 2026 ஆம் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.

இவ்விழாவிற்கு வாழ்த்துரை முனைவர். சி. அன்பரசன், மற்றும் வணிகவியல்த்துறை இணை பேராசிரியர் இல. ஜெகதீசன்  இருவரும் வழங்கினார்கள். இவ்விழாவில்  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தர்மபுரி அரசு கலைக் கல்லூரி  இயக்குநர் முனைவர். கு.பாலமுருகன் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு துறை குறித்த  நெறிமுறைகளை தெளிவாக மாணவர்களுக்கு  எடுத்துரைத்தார். 
    
கிருஷ்ணகிரி மாவட்டம், அரசு மகளிர் கலை கல்லூரி  முதல்வர் முனைவர். சௌ.கீதா அவர்கள் மாணவர்களிடம் உரையாற்றும் போது மாணவர்களின் மன நலத்தை குறி்த்தும், கல்வி கற்றால் தான் மேலும் மேலும் தான் சுய மரியாதையுடனும் மக்களுக்கு சேவை செய்யும்  பக்குவம் இயல்பாகவே வந்துவிடும் என்று தன் உரையில் சிறப்பாக கூறினார். 

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்கள் இருவரும்  பல்கலைக் கழக  தேர்வில் மற்றும் விளையாட்டில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பை யை வழங்கினர். இவ்விழாவிற்கு ஆங்கில துறை தலைவர்/பொறுப்பு  முனைவர். இரா. ப. குறள்யா அம்மையார்  அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.  தொடர்ந்து மாணவர்களுடைய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதியாக நாட்டுப் பண் நிகழ்வுடன்  நிறைவுற்றது. மேலும் கணிதத்துறை தலைவர் முனைவர். அ.சி.பிரசன்னா மற்றும் வெங்கடேசன்   இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து  அனைத்து பணிகளையும்  சிறப்பாக செய்து, சிறப்பாக நடத்தினார்கள்.

 செய்தியாளர் 

மாருதி மனோ