ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கக்கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் இராயக்கோட்டை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க கோரி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்தப் பகுதியில் ஓசூர் பெங்களூர் சாலையில் வாரத்திற்கு இரண்டு முறை மூன்று முறை விபத்துகள் நடைபெறுகிறது, ஒரு சிலர் இறந்ததும் உண்டு.

இந்த நிலையில் மாவட்ட நிர்வாகத்திற்கும், மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் மனு வழங்கப்பட்டும் இந்நாள் வரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது பள்ளி மாணவ, மாணவிகளின் வசதிக்காக உடனடியாக மேம்பாலம் கட்டிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோசங்கள் எழுப்பபட்டது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பாளர் நெப்போலியன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு தொகுதி தலைவர் மாரிமுத்து, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் கல்பனா மகேந்திரன் மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சிய சேர்ந்த மாதையன், காவேரி, செந்தில், மல்லிக், அர்ஜுன் , சிபிஜெட், கார்த்திக், சீனிவாசன், உமேஷ் குமார், மாதேவன், மாதையன், மன்சூர், கார்த்தி, ராவணக்கண்ணன், ராஜா, சங்கர், குட்டி புலி குமார், என்டிஆர் மஞ்சு, செயற்குழு உறுப்பினர் பசுவராஜ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி காவியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
