குற்றாலம் பேரூர் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி பிரசாரம்.!

தென்காசி

குற்றாலம் பேரூர் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி பிரசாரம்.!

குற்றாலம் பேரூர் திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி பிரசாரம்

தென்காசி டிச 13

என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி தமிழ்நாடு தலை குனியாது பிரசார கூட்டம் திமுக தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாவட்ட திமுக பொறுப்பாளர்  வே.ஜெயபாலன்  அறிவுறுத்தலின்படி 
தென்காசி மாவட்டம், குற்றாலம் பேரூர் திமுக சார்பில் பரப்புரை கூட்டம் நடந்தது.

இந் நிகழ்ச்சிக்கு  குற்றாலம் பேரூர் திமுக செயலாளர் சங்கர் என்ற குட்டி தலைமை வகித்து தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்களை வீடு வீடாக சென்று வழங்கினார்.

இந் நிகழ்ச்சிக்கு  முன்னாள் மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற நியமன உறுப்பினர் வசந்தகுமாரி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சிக்கு தொண்டரணி துணை அமைப்பாளர் சுரேஷ் வரவேற்புரை ஆற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பிரதிநிதி வளராஜன், வார்டு திமுக செயலாளர்கள் அனந்தநாராயணன், திருமலைக்குமார், காசிமேஜர்புரம் மூக்கன், சுரேஷ், கமலாதேவி, ஜவஹர், பூத் டிஜிட்டல் ஏஜென்ட் விக்னேஷ் குமார்,  இளைஞர் அணி மனோ, கருப்பசாமி, தங்கராஜ், BLC ஜிம் ஜெய்சங்கர்,மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் பேரூர் திமுக துணைச் செயலாளர் BLA 2 மாரியப்பன் என்ற கருணாநிதி நன்றி கூறினார்.

செய்தியாளர் 

AGM கணேசன்